Saturday, September 12, 2020

நான






வெறுமையே உனை 
காதல் செய்கிறேன் 
தனிமையில் 
தியானம் கொள்கிறேன்

பாதியாய் ஜீவன் 
கரைந்து போகிறேன்
பாவியாய் எனை நான் 
உணர்ந்து கொள்கிறேன்…!!

மேகமாய் நான் 
கலைந்து போகிறேன்
மேனியை தீயில் 
கரைக்கப் போகிறேன்

நா வறண்டு 
சாகபோகிறேன்
எனை நானே வரைந்து 
கசக்கி எறிகிறேன்….!!

நான் யாரென்று 
மறந்து போகிறேன்
மறு வாழ்வொன்று இனி வேண்டாம்
முற்றுப்புள்ளியில் எனை நானே 
முடித்துக்கொள்கிறேன்..!!!

இனி
மெளனமாய் கடந்து போகிறேன்
மரணம் மறந்து உறவை துறந்து
தனிமையாய் நகரபோகிறேன்…!!

-பிசாசு-



அந்த இரவு




பருவத்தின் தீதனை
தனித்திட நான் -ஒரு மாய
உலகத்திற்குள் நுழைகின்றேன்..!!
 
மதுவின் சுவைகண்ட – என் நாவிற்கு
மாதுவின் சுவை காண ஆசையூறியது
 
போதை தலைக்கேறியும்
பாதை மாறாது
சுகம் தேடி
வழிப்போனதென்னவோ
ஆச்சரியம் தான்..!!
 
அழகழகாய்
வகை வகையாய்
மூவாறு முதல் நாற்பதை
கடந்தது வரை-அரைநிர்வாண 
புகைப்படத்தில் காட்டப்படுகிறது…!!
 
தேர்ந்தெடுப்பதில் என்றுமே நான்
தோல்வி கண்டவன்
இதில் மட்டும் எப்படி???

ஆரஞ்சில் ஒன்று போதும்
என்றெந்தன் மனம் புகைப்படங்கள் 
பார்க்காது புத்தி சொன்னது….!!
 
வாடகை அறையில் அமர்ந்திட
வழி சொல்லிக் கொடுத்தனர்…!!
 
முழுவதுமாய் நான் -மூன்று
சிகரட்டுகளை முடிக்கின்ற வேளையில்
பிின்னால் ஒரு உருவம்- பெண்தான்
அவளென்று நிழல் சொன்னது….!!
 
தாழிட்டு அவள் திரும்பி
நடைபயின்று என் அருகில்
அமர்வதை நான் உணர்ந்தேன்..!!
போதை கொஞ்சம் தெளிந்தேன்..!!
 
அவளின் மல்லிகை கலந்த 
வாசனை திரவியத்தால் 
புகைத்தலின் நாற்றத்தையும்
மிஞ்சிட முடிந்தது…!!
 
முகம் பார்க்க மனம் விரும்பவில்லை
வாய் பேச வார்த்தைகள் வரவில்லை
கட்டியனைக்க கரங்கள் நீளவில்லை
 
விட்டு விட்டு ஒளிர்ந்த மின் விளக்கின்
வெளிச்சத்தில்- இதயம் விடாமல் துடித்தது 
ஏனோ ஒரு பயத்தினால்..!!

அமைதியாய் இருந்தால் என்ன அர்த்தம்
ஏதாவது பேசலாமே
 
என்றவள் குரல்  கேட்க
மீதி போதையுபம் தெளிந்து
சித்தம் கலைந்து
திரும்பி நான் பார்த்தேன்..!!
 
விழிகள் விரிந்து
கண்ணீர் வழிந்து
உதடுகள் காய்ந்து
கரங்கள் நடுங்கி
வார்த்தைகள் மறந்து
எழுந்து நான் ஒரமாய் ஓடிப்போனேன்..!!
 
அலங்காரப் பெண்ணாய் அங்கிருந்தவள்...!!
                       
ஐயோ..!!
உறவைக் கூட சொல்ல முடியவில்லை 
ஔியிலவள் தெரிந்த பின்பு..!!
 
மரணம் வந்து கொல்லும் கதை..!!
மறந்திட நினைத்தேன் அந்த இரவை..!!!
மறுக்க முடியாது அவள் உறவை…!!
-பிசாசு-



 
 

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...