Monday, August 9, 2021

நானுன்னால்

 
எழுதவேண்டுமெனும் போதெல்லாம்
என் முன்னே புன்னைக்கிறது
உன் முகம்..!!
 
அனைத்துக்கொள்ள துடிக்கும்
கரங்களுக்கிடையில்
காற்றாய் தீண்டும் உன்
பரிசம்..!!
 
 
சகியே..!!
 
வானம் தூரமில்லை
உன் கை நான் கோர்க்கையில்...
நானம் குறையவில்லை
நானுனை தீண்டுகையில்..!!!
 
வெறுத்து நான்
விலகி நாணொன்றாய்
நீளும் போதெல்லாம்
 
பொறுத்து நீ
நெருங்கிவந்து
அள்ளியெடுத்து
அனைத்துக்கொள்ளும் தாயென நீ
 
கடந்து நான் வந்த உறவுகளில்
எனைவிட அதிகமாய்
எனை நேசிப்பவள் நீ
 
கரைந்து நான் போவதாயினும்
மறந்துனை நான் கடப்பதாயினும்
மரணித்தாகவே வேண்டும்
என்கிறது இதயம்..!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...