"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
Sunday, October 21, 2018
மழலை
மயக்கும் ரீங்கார பொன்வண்டு போல்
மழலை சிரிக்க -மனதில் சுரக்கும்
அமுதாய் தேன் சொட்டு..!!!
கவலைகளை எல்லாம்
நொடிப்பொழுதில்
மறந்திடச் செய்யும் மந்திரம்
உயிர் கொடுத்தவள் சோர்ந்திருக்க
புன்னகைக்க வைத்திடும் தந்திரம்..!!!
அழகு முகத்தின் அடையாள சின்னம்
மழலை சிரிப்பு- இடம் பொருள் பாராது
அனைத்திட தோன்றும் தினம் தினம்..!!!
உலகத்து மொழிகளெல்லாம்
மொளனமாய் மொழிபெயர்க்க
மழலை மொழி போதுமே
புது புது பாஷைகளும் வழி பிறக்க..!!!
காணத கடவுளை காண
கண்கோடி தேவையில்லை
கண்டுவிட்டால் போதும்
மழலையின் சிரிப்பை
அந்த சொர்கமே கைவந்து சேரும்..!!!!
-பிசாசு-
Subscribe to:
Post Comments (Atom)
நீ
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...

-
எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய் எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது எவை மறக்கப்படுகிறதோ அவைள் அணைத்...
-
மூச்சுக்கு முன்னூறுதடவை என் பெயர் உச்சரித்தவள் இன்று ஒரு பேச்சுக்கு கூட என் பெயர்க்கொண்டு அழைக்க மறுக்கின்றாள் என்னை மறந்துபோன என் காதலை ம...
-
நீ இல்லாத நாட்கள் வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!! வெளிச்சமற்ற விண்மீன்களின் ஊர்வலமாய் எந்தன் வானம்..!!! நீ இல்லாத நாட்கள் உறங்காத கண்...
No comments:
Post a Comment