Wednesday, January 23, 2019

காதல் எதிரிகளே..!!

நன்றிகடன் பட்டுவிட்டேன்
உங்கள் நா இறைக்கும்
வார்த்தைகளுக்கு

நினைவில் நிறுத்திக்கொள்ளுங்க
மனம் மாற்றி இடம் மாற்ற
நீங்கள் விதிக்கும் வியூகங்கள் எல்லாம்
வீணாய் போய்விடலாம் ஒருநாள்..!!!

சிறு துளியில் உருவாகி
உடல் கொண்ட மனிதரெல்லாம்
உயிர்கொண்டு வாழ தேவையொன்று
உண்டு- அது அன்பென்று வேறெது??
அன்பிலே உருவான
காதல் ஏன் இன்று
தீண்டாமையானது???

நீங்கள் எழுதிய சாசனத்தில்
காதல் வசனத்தில்
காதலின் தகுதி என்ன பணமா??
ஜாதிக்கு முதலிடமா??
வசதிக்கு கட்டாய ஒதுக்கீடா??
கௌரவத்திற்கு என்றொரு சிம்மாசனமா??
இவைதான் உங்கள் பார்வையில் காதலென்றால்
அன்புக்கு மட்டும் அங்கு அறைகுறையா???



காதலை மனம்விட்டு பிரிப்பதும்
ஓர் உடலை கூட்டமாய் நின்று
அம்மணமாக்கி பார்பதுமொன்றே
உங்களுக்கு அது ஓருவித சுகமாகலாம்
காதலித்த இதயத்திற்கு அது ரணம் தான்…!!!


பிரித்துவைத்து சிரிக்கின்றீர்கள்
வெறுத்து போகவே நினைக்கின்றீர்கள்
மறந்து வாழ சொல்கின்றீர்கள்
மனம் மாற்றிட துடிக்கின்றீர்கள்
மறு மணம் எற்க கட்டாயடுத்துகின்றீர்கள்..!!!



என் வம்புக்குறிய

காதலின் எதிரிகளே...!!!
உங்களுக்கு என் நன்றிகள்
எங்கள் காதலின் அழவை
உணர்த்திவிட்டமைக்கு
புனிதமதை புரியசெய்தமைக்கு
இதயம் இரண்டை இன்னும் அதிகமாய்
காதலிக்க தூண்டியமைக்கு..!!!

ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்

எவை என்ன செய்தாலும்
எனைவிட்டு அவளும் என்னவளும்
அவளின்றி நானும் அவளானவனும்
உறுதியாய் ஓர் வழிகொண்டோம்
சேர்ந்திருப்போம் தனியாய்
காதல் சுமந்திருப்போம் உயிராய்..!!

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...