சொந்தங்கள் தடுத்தலென்ன
பந்தங்கள் படை
கொண்டெழுந்தால் என்ன
கௌரவம் ஜாதியென்று கை நீட்டி
பணம் பதவி அதிகாரம் செய்தாலென்ன
இவற்றையெல்லாம்
கடந்து வெல்லும் உண்மை காதல்
சொந்தங்களையும் பந்தங்களையும்
சேர்த்து வாழும் உண்மை காதல்..!!!

-பிசாசு-
பிரிந்தோம் என்று நினைக்காதே
தனிமையில் நாம் இன்னும் அதிகமாய்
காதலிக்கின்றோம்..!!!
மறந்தோம் என்று மறந்திடாதே
மனம் முழுவதும்
நினைவை நிரப்பியிருக்கின்றோம் ..!!!
பாரா முகமாய் கடந்துபோகின்றோம்
என்றெண்ணி பைத்தியமாகாதே
பார்க்கும் இடமெல்லாம் நம் முகங்களின்
நகழ் விழுவதை மறுக்காதே..!!!
அன்பே…!!!
இறப்போம் நாம் சேராது
கடப்போம் வலி தாங்காது
என்றெல்லாம் வழிமாறி நீ போகாதே
ஒரு நொடியேனும் ஒன்றாய் வாழ்ந்து
மடிதனில் மரணிப்போம் மறவாதே..!!!
-பிசாசு-
No comments:
Post a Comment