Friday, November 24, 2017

தடை..!!!

நேரம் கூடிவர
நேசமும் சேர்ந்துகொள்ள
காதலர்களாகினர்
இவர்கள்…!!!


காலங்கள் பல கடந்து
காதலுக்கு மரியாதைசெய்ய
இல்லறத்தில்
இணைந்திட இரு இதயங்கள்
ஒன்றாகின…!!!

ஓர் நாள்
சாக்கடை மலரொன்று
சந்தன மரத்துடன்
சல்லாபமா என்றும்

மறுநாள்
தாழ்வான ஓர் குலம்
உயர்வான குலத்தோடு
குதூகலமா என்றும்

பிரித்து வைத்து
பெரு மூச்சு விட்டது
ஓர் கூட்டம்..!!!

தடைகள் தாண்டி
தன் காதலுக்காய் போராடி
ஒன்றாய் இனணைவதில்
தோற்று போயின அந்த
இரு இதயங்கள்…!!!

முடிவுகள் மாறின
இன்று
இவர்கள்
கல்லறையிலும்
காதலர்களாம்..!!!

காதலின் மறுவடிவம்
கல்லறைதான் என்றால்
ஏன் இந்த காதல்
இந்த பூமியில்..???

வகுப்புவாதங்கள் பேசி
வகுத்துப் பார்க்கும்
வக்கிரக்காரர்களின்

வரட்டுக்கவுரவத்திற்குள்...
அகப்பட்டு அழிந்துபோகிறது..!!!

காதலிக்கும் இதயங்களை மறுத்து
உயர்வு தாழ்வென்றும்
ஜாதி மதமென்றும்
போதங்கள் பல கொண்டு
காதலை ஏன் சாகடிக்க வேண்டும்..???

மனிதநேயம்
மறந்த மனிதர்கள் வாழும்
பூமியை விட்டு பறந்து போன
அந்த இரு இதயங்களும்
தமக்கானதாய் ஓர் உலகத்தில்
காதலித்துகொண்டிருக்கும்
அங்கே
இந்த மனிதர்களுக்கு
தடைவிதிக்கப்பட்டிருக்கும்….!!!!

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...