Saturday, May 20, 2017

புத்தம் மறந்த பித்தர்கள்

முள்ளிவாய்கால்
முற்றுபெறாதொரு ரகசியம்
தர்மதாயும் கற்பழிக்கப்பட்டு
அதர்ம நாய்களின்
அராஜகம்
அரங்கேறிய நாள்…!!!


முடவனே

யுத்தம் நீ கொள்ளவில்லை
பித்தம்கொண்டாடினாய்
புத்தன் வழி நடக்கவுமில்லை
பௌத்தனாய் நீ இருக்கவுமில்லை..!!!

மூடனே

துப்பாக்கி ரவைகளும்
செல்லடிகளும் கொண்டு -எம் வீரபெண்களை
வெல்ல முடியவில்லையென்று
காமவேட்டையில் தான்
வென்றிட முயன்றாய்..???

அரக்கனே

கருணை சொல்லி தந்தவளா
உங்கள் தாய்
இல்லை இல்லை..!!!
கட்டுப்பாடுகள் பற்றி கதை
கூறியவரா
உங்கள் தந்தை..???
இருக்கவே இருக்காது..!!!

புத்தன் சொன்ன கதைகளை
கேட்டவரா
நீங்கள் ஒருபோதுமில்லை..!!!
கால நேரம் கை கூடிவந்தாலும்
தாய் தங்கையோடும்
புணரும் இனம்தான் நீங்கள்…!!!


பித்தனே

கைகளை கட்டிப்போட்டு
கண்களை மூடிவிட்டு
ஆடையின்றி அம்மணமாயாக்கி
ஆன்மாவை பிரித்தது உங்கள்
கோழைத்தனம்…!!!

மார்பங்களை அறுத்து
யோனிகளை கிழித்த
உங்கள் நா
நிச்சயம் தாய்பால் குடித்து
வளர்ந்திருக்காது
சுக்கிலம் நீர்
குடித்ததாகியிருக்க வேண்டும்..!!!

சிறுபிள்ளை முதல்
வயதாகிபோன
பெண்கள் வரை
கற்பழிக்கப்பட்டு
கொலை செய்யப்பட்டு
பிணத்தோடும்
காமவெறி தீர்த்த
உங்கள் ஆண் குறிகள்
அழிந்துபோகட்டும்..!!!

பால் மனம் மாறா
பச்சிளம் என்று வாதம் செய்தது
தீவிரவாதம் செய்தது..??
நீங்கள் எல்லாம் அழிக்க நினைத்தது
ஆயுதம் தாங்கிய புலிகளையல்ல
ஆயிரமாண்டுகால
தமிழை..!!!


முள்வேலிக்குள் அன்று
மூடிவைத்துவிட
நீங்கள் நினைத்தது
முப்பதுவருட கனவை
தமிழ் உணர்வை
எங்கள் அடையாள சின்னத்தை..!!!

மேக்க புதுன்கே தேசயாய்”
என்று நீங்கள் கூவிக்கொண்டு
திரிவது நியாயம் என்றால்
தனிநாடு தமிழீழநாடு
என்று நாங்கள் உயிர்விட்டது
எந்தவகையில்
அநியாயம்..???

கலிகாலம் கொண்டு நீங்கள்
காவியுடை பூண்டு
இனவாதம் பேசிதிரியும்
போதகர்களே…

கடவுள் இருக்கின்றாரா
இது விடைதெரியா
கேள்வி அது போல்
காலம் மாறும்
கரிகாலன் காலம் வரும்


கணக்கை கச்சிதமாய் முடிக்க
ஒரு காலம் பிறக்கும்.
காத்திருப்போம்
கண்ணீருடன்.!!!

-பிசாசு-😈😈😈

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...