Wednesday, May 3, 2017

காதலை மரணம் வென்றது

பிறந்த நாள் முதல்
நான் வாழ்ந்த நாட்கள் 
உனக்காகத்தான்..

இணைசேர முடியா துருவங்களாய்
உயிர் சேர வழியில்லா உடல்களாய்
நீயும் நானும் தவித்து 
துடித்துக்கிடந்தோம்..!!!


ஏழ்மையில் பிறந்து
எளிமையில் வாழ்ந்தாலும்
என் காதல் மட்டும்
வெறுமையில் இருக்கவில்லை..!!!


உனை நினைத்தே
துடித்த என் இதயம்
துளைகளாய் துண்டாடி
தூள் தூளாய் உடைந்து 
போனதேனோ அன்பே..!!!!


ஜாதி மதங்கள் எம்மை 
பிரித்து வைத்து சிரித்தது...
காதல் மனம் நம்மை 
இணைத்து வைத்து ரசித்தது....
பேதை உன் எண்ணம் 
என்னுள் இரண்டர கலந்தது
பாதை மாறி போகா நம் காதலால் மட்டும் 
எப்படி முடிந்தது..???


சேர்ந்திடத்தான் காதலித்தோம்
வாழ்ந்திடத்தான் 
கட்டியணைத்தோம்
உனக்குள் நானும் எனக்குள் நீயும்
ஒழிந்துக்கொள்ளத்தான் ஓடி திரிந்தோம்

விதி செய்த சதியா அன்பே
பிரியாத நம் காதல்
பிரித்திட முடியாத நம் உறவு
மண்ணுக்குள் மண்ணாய் போனது
காதலை மரணம் வந்து  எப்படி 
வென்றது..,?????

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...