Thursday, May 18, 2017

விடுபடா நினைவு..!!!

விபரீதம் தெரியாது 
காதல் தரையில் விழுந்து 
சுக்கு நூறாய் 
உடைந்தே போனது 
இதயம்..!!!

 

செடிகளை வெட்டி 
அழகுபார்க்கும் பாவை நீ 
பூக்களை கொய்து 
ஆசை தீர்க்கும் பேதையும் நீ 
உறவை எரித்து திருநீறு பூசும் 
அகோராதிபதியும் நீ 
காதலை ஒடித்து வைத்து 
புன்னகைக்கும் பைத்தியகாரியும் நீ 
என்றறியாது 
ஓர் காதல் கொண்டேன் …!!!

 

தீயறிந்தும் தீண்டும் 
விட்டில் பூச்சாய் 
உனை தேடிவர சுட்டெரிக்கின்றாயடி 
எனையும் 
எட்டிவைத்து பார்கின்றாயடி…!!!

வலிகளோடு 

வாழ்ந்திடவும் முடிந்ததடி 
என் காதல் ஒத்தடமிட்டு 
எனக்காக தாலாட்டுபாடி 
ஆறுதலாய் அணைத்து 
சொல்கின்றது -உன் 
அடிமை சங்கிலியில் 
விடுபடா உன் நினைவை 
மட்டும்கொண்டு 
எனை ஆட்சிசெய்கிறது…!!! 

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...