Wednesday, May 24, 2017

காதல் நினைவு

உன் வெட்கங்களை
ரசிக்கவேண்டும் என்பதற்காகவே
அடிக்கடி
முத்தக்கோரிக்கை
முன்வைக்கிறேன் நான்..!!!


நிராகரிப்பு செய்யாத
நல்லதொரு அரசாங்கம்தான் நீ..!!!

பிசாசு😈😈😈😈😈😈


.............................................................................................

மரணிப்பதை பற்றி
ஒருபோதும் நான்
கவலைகொண்டதில்லை
அதற்குள் வாழ்ந்துவிட
வேண்டும்- உன் மடியில்..!!!


பிசாசு😈😈😈


........................................................................................


எனக்குள் இருக்கும்
என்னை எடுத்து
உன்னை எனக்குள்
தினம் சேமிக்கின்றேன்


சகியே..
இடம் போதவில்லையடி
கொஞ்சம் உயிர்வரை
வந்துபோவாயா..??


 
பிசாசு😈😈😈😈
.................................................................................

காதல் கொடுக்கப்படும்போது
அதிக சந்தோஷத்தையும்
அதே போல அவனி(ளி)டமிருந்து
கிடைக்கும் போது
மோட்சத்தையும் பெறுகிறது


#பிசாசு😈😈

😈
😈
😈

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...