Tuesday, January 10, 2017

சின்னஞ் சிறு உலகைவிட்டு வெளியே வா மனமே….!!!

சாடிக்குள் முட்டிக்கொண்டு
வேடிக்கை பார்க்காதே இவ்வுலகை
நேசித்து ரசிக்க நெஞ்சம் கொள்
சுவாசித்து உணர்வுகளை 

வாசிக்க கற்றுக்கொள்..!!!

தோல்விகளில் வெற்றியை கற்றுக்கொள்
வெற்றியில் பணிவை தேடிக்கொள்
உயர்வில் உன்னை நீ தெரிந்துகொள்
உண்மையில் உன் 
உலகை பெரியதாய் மாற்றிக்கொள்..!!!


சின்னஞ்சிறு உலகில்
பொறாமை கழுகள் பறந்துதிரியலாம்
துரோக நாகங்கள் படமெடுத்து ஆடலாம்
நயவஞ்சக நரிகள் உனை சுற்றி 
நடமாடலாம் மறக்காதே..!!!

வட்டத்தை சுற்றியே ஓர் வாழ்க்கை வாழதே
சிறகு கொடுத்து சிகரம் தொட்டு வாழ
விரைந்து வா நீ மனமே..!!!

உனக்கான உலமமொன்றை 
படைத்துக்கொள்
அது கண்ணிலடங்காது
உன் சொல்லில் தொகுக்க முடியாது
நடந்து தொட்டுவிட முடியாதளவு
பெரிதாய் இருக்கட்டும்..!!!

வெளியே வா மனமே
இந்த சின்னஞ்சிறு உலகைவிட்டு
பறந்து நீ வா- அங்கும் உனக்காய் 
இருப்பிடமுண்டு
துடிக்கும் இதயமுண்டு
உன் எண்ணங்களுக்கு உயிருமுண்டு
வெளியே வா….!!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...