Monday, January 9, 2017

முடியுமா???

உன் ஒற்றை வார்த்தையில்
பிரிவை தந்து -என் மனத்தை
ரணமாக்கினாய் காதலை
மெளனமாக்கினாய்..!!!


சில தருணங்களில்
நாமிருந்த நிமிடங்களை
மறந்தே போனதாய் 
நிகழ்வுகளை
கேள்விக்குள்ளாக்கினாய்..!!!


உன் கண்ணில் 
என் இதழ்கள்
பதித்த சத்தமில்லா முத்தத்தை…!!
நெற்றிபொட்டில் நான் வைத்த
முத்தப்பொட்டை..!!


விரலோடு விரல் கோர்த்து
வரைந்த 
காற்றோவியத்தை..!!!
காதோடு நான் பேசிய
காதல் காவியத்தை…!!!

உச்சி முதல் பாதம் வரை
நித்தம் ஓடிய -என் 
சுட்டு விரல் தடத்தை..!!!


உன் குன்டான 
நாசி மேல்
தினம் மேய்ந்த -என் மீசையை..!!!
உன் மார் போடு சாய்ந்து 
நான் வைத்த காதல் 
முத்தத்தை..!!!

குத்தவேயில்லை என்று
தாடிக்குள்  கொட்டிய  ஆயிரம் 
குட்டி முத்தத்தை..!!!


இப்படி எதை வேண்டுமானாலும்
உன் உடலால் மறக்க முடியலாம்..!!!


சகியே
நாம் என்ற ஒற்றைசொல்லில்
நானும் நீயும் சேரந்த காதலை..?

உன் உள்ளத்தால்??
??????????????????????????????????
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...