அன்பே என் ஆயுளின் முழு தவமே..!!!
வரத்தினை தந்துவிட்டு நீ ஏன்
காற்றிடை கலந்தாயே பூவம்மா
வேரோடு அறுந்தாயே..!!
உன்னை அனைத்த நெஞ்சில்
இன்னமும் வாசனை தீரலையே..!!!
சுவாசத்தில் சேரும் முன்பே யாரம்மா..??
மூச்சினை தடுத்தாரே..???
அம்மா என்றும் அழைத்தாய்
செல்லமாய் அப்பன் என்றும் அழைத்தாய்
உன்னை நான் அழைக்ககையிலே
“மீனு குட்டி” காதுகள் அடைத்தாயே
குட்டிமா எழுந்து நீ வாராயோ..???
தேடிவந்த தெய்வமே
உன்னை நான் ஓடிவந்து அனைத்தேன்
கூடி வாழும் முன்பே
ஏனம்மா கூடுவிட்டு பிரிந்தாய்
செல்லமே நாடி நரம்பை அறுத்தாய்..!!!
பாடிய பாடல் கோடி
உன்னோடு ஓடிதிரிந்த நாட்கள் தேடி
அலையும் எந்தன் ஆவி
குட்டிமா..
மீண்டும் பிறந்த நீ வாராயோ
அப்பனின் அழுகுரல் கேக்கலையோ..???
-மகளை இழந்த ஒரு தந்தைக்காக...
பிசாசு
No comments:
Post a Comment