நாம் கணக்கு பார்க்க
முடியா விறுவிறுப்பாக திசை மாறி
பயணப்பட வைக்கும் சுவாரசியம்....
கொட்டுகிறது வெண்பனி
பார்க்க அதுவும்
பாம்பை போல் அழகு
பாதம் பதித்து சென்றேன்
என் பலாச்சுழை உதடு முதல்
பாதம் வரை வெடித்து வருகிறது
ரத்தம்
எத்தனை கிறீம் பூசியும்.....
யுத்த பூமியில்
இல்லா தனிமையும் வெறுமையும்
சமாதான நாட்டில்
சுற்றி வர தெரிந்தும் தெரியாமலும்
பல முகங்களும் போலியான சிரிப்பும்
நலவிசாரிப்பும்
திசை மாறிய வாழ்க்கையில்....
செல்வச் செழிப்பிற்கு பஞ்சமில்லை
பணம் கொடுத்தும் வாங்க அன்பில்லை
விற்பவர்களை தேடி
போலிகளிடம் ஏமாறி
தனிமைத் தீவில் தள்ளி
காலில் தளை தனை பூட்டி
வந்தோம் வாழ்ந்தோம் எனும் அந்த நொடியில்
மனமோ யுத்தமே என்றலும்
நம் நாடாகுமா என்ற ஏக்கங்களுடன்
திசை மாறிய வாழ்க்கையில்
பயணிக்கிறது.....
சிறிமதி.
செல்வச் செழிப்பிற்கு பஞ்சமில்லை
பணம் கொடுத்தும் வாங்க அன்பில்லை
விற்பவர்களை தேடி
போலிகளிடம் ஏமாறி
தனிமைத் தீவில் தள்ளி
காலில் தளை தனை பூட்டி
வந்தோம் வாழ்ந்தோம் எனும் அந்த நொடியில்
மனமோ யுத்தமே என்றலும்
நம் நாடாகுமா என்ற ஏக்கங்களுடன்
திசை மாறிய வாழ்க்கையில்
பயணிக்கிறது.....
சிறிமதி.
No comments:
Post a Comment