Sunday, November 20, 2016

நிழலாடும் நினைவுகள்

கண் மூடி உனை நான் கனவுகளிலும்
காதல் செய்வேன்- நிஜமாக நீ என்னுள்
உயிரோடி கிடக்கின்ற போதும்…!!!

நீயும் நானும் சந்திக்காத போதும்
ஒருவரையொருவர் காதலை 
சிந்தித்தோம்..!!!

தனித்தனியே காதல் கொண்டும்
தனிமையில் எமை நாம் 
வஞ்சித்தோம்..!!!

இன்று நீயும் நானும் நாமாகி
உயிராய் ஓர் உறவாகி காதலில் 
தித்தித்தோம்..!!!



உன் வெட்கங்கள் உடைத்து
நீ கொட்டித்தீர்தாய் உன் காதலை
நான் என் கவிதைகளை கடன் கொண்டு
முட்டி மோதினேன்..!!!



நிஜமாகவே
இன்னமும் ஆச்சரியம் தானடி
ஏன் நீ என்னுள் விழுந்தாய்
நானெப்படி உன்னுள் 
தொலைந்தேனெற்று..!!!


தேடித் தேடி தீராத காதலை நீ தந்தாய்
இனி நாம் கூடிக் கூடி காதல் செய்வோமடி..!!!


நிஜங்கள் எல்லாம்
நம்முள் நின்றாட தினம் தினம்
காதலும் கவிதைகளுமாய்
என்னுள் நிழலாடிக்கிடக்க
மீண்டும் மீண்டும் நானுள்ளே
உயிராடிப் போகின்றேனடி…!!!!

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...