கோவில் படியேறவில்லை
தவம் ஏதும் கொள்ளவில்லை
அக்கினியிலும் கால் பதிக்கவில்லை
அலகு குத்தி நேத்தி செய்யவில்லை
உனை காணவேண்டி கடவுளிடம்
கை கூப்பிடவுமில்லை- இவையேதும் செய்யாது
எதிர்பாராமல் கிடைத்தவள் நீதானடி
மாறிவந்த கோலமில்லை
எனை தேடிவந்த வரமேதான் நீ..!!!
பேசிடத்தான் வார்த்தைகள்
தேடினோம்
வாழ்ந்திடத்தான் புது காதலையும்
நாடினோம்- காணாத போது
கைப்பேசி வழியே நிமிடங்கள்
முழுதும் கலந்தோம்..!!!
குரல் கேட்காத பொழுதெல்லாம்
குறுஞ்செய்தி வழியே
குறைவின்றி மொழிந்தோம்..!!!
நித்தமும் சத்தங்களோடு
முத்தங்களும் பொழிந்தோம்..!!!
நீயும் நானும் நாமாகவே
நமக்குள் காதலாகவே
தாம்பத்தியம்
வளர்த்தோம்..!!!
புகைப்படங்கள்
இடம்மாறியது நம் இதழ் பழங்கள்
இன்னும் சுவை கூடியது..!!!
கற்பனையில் நீ என்னோடு வாழ்கிறாய்
கவிதையில் நான் உன்னோடு கரைகிறேன்
நாம் சந்திக்கும் நாட்கள்
வெகுதொலைவில் இல்லை
வெட்கங்களை கொஞ்சம்
ஒத்திகை செய்துகொள் பெண்ணே..!!!
நம்மை கண்டு காதலும்
ரசித்து வெட்கம் கொள்ள வேண்டும் ..!!!
-பிசாசு-
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
Subscribe to:
Post Comments (Atom)
நீ
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...

-
எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய் எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது எவை மறக்கப்படுகிறதோ அவைள் அணைத்...
-
மூச்சுக்கு முன்னூறுதடவை என் பெயர் உச்சரித்தவள் இன்று ஒரு பேச்சுக்கு கூட என் பெயர்க்கொண்டு அழைக்க மறுக்கின்றாள் என்னை மறந்துபோன என் காதலை ம...
-
நீ இல்லாத நாட்கள் வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!! வெளிச்சமற்ற விண்மீன்களின் ஊர்வலமாய் எந்தன் வானம்..!!! நீ இல்லாத நாட்கள் உறங்காத கண்...
No comments:
Post a Comment