Sunday, November 20, 2016

அணையாத நெருப்பு..!!!

காடுகளாய் கிடந்த எம் நாட்டை களையெடுத்து 
கற்பாறைகளை தவிடுபொடியாக்கி
உயர் நிலமேறி புது ஊரென உருவாக்கி
“சிலோனுக்கு” உலகமெல்லாம்
தேயிலையில் அடையாளம் கொடுத்தவர்
கள்ளத்தோணி என்று வஞ்சித்த எங்கள்
பரம்பரைதான்…!!!


மாசிக்கும் தேங்காய்க்கும் ஆசைகொண்டு
நாடுதாண்டிய கூட்டம்தானென
வரலாறு எழுதியவர் ஏறாழம்- எழுதியதை
எதைகொண்டு மாற்றிட..???


கொழுந்து கூடைகளையும்
கவ்வாத்து கத்திகளையும் கொண்டு
நாம் படைத்தோம் புது தேயிலை வரலாற்றை..!!!


ஆண்டு அனுபவிக்க தகுதியுடைய நாங்கள் எல்லாம்
நாண்டுகொண்டு சாக- எம் சவத்திலும்
சாக்கடை அரசியல் பேசியவரும் இன்னமும் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறனர்
ஈனபிறவியொன்று…!!!


பிறந்த மண்ணைவிட்டு
புறம்காட்டி ஓடிடவும் முடியாது
தமிழ் தாய் பாலுட்டி வளர்த்ததால்..!!!
இறந்தாலும் இனியொரு
புதுவிதி செய்வோமென்று போராடி
அட்டைக்கடி இரத்தத்தில் நீராடி
வாழ பழகியதால்…!!!


அன்று எவனோ ஒருவன் ஏற்றிய நெருப்பு
இன்றும் அணையாது எறிகின்றது எம் முன்
பத்தடி கொண்ட வீட்டு லயமாய்…
அரசியல் நாடகமாய்…..
வருமான ஏய்பாய்…
பணச்சுறண்ணடலாய்…
உரிமை மீறலாய்…
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...