சகியே..
உன் இடையை சுற்றி தவழும் புடவையின்
சின்ன நூலாக மாற
தவமிருந்திருக்கிறேன் ..!!!
நீ மார்போடு
அணைக்கும் புத்தகமாய்
நானிருக்க கூடாதா
என அழுதுமிருந்திருக்கிறேன்..!!!
வெட்கத்தை விட்டு சொல்கின்றேனடி
நீ மார்போடு
அணைக்கும் புத்தகமாய்
நானிருக்க கூடாதா
என அழுதுமிருந்திருக்கிறேன்..!!!
வெட்கத்தை விட்டு சொல்கின்றேனடி
உனது பூம்பாதம் தாங்குகின்ற
பூமியாகக் கூட பிறந்திருக்க கூடாதா என
என்னையே நான்
நொந்திருக்கிறேன்...!!!
உன் கால்களில்
தழுவும் கொலுசுகளின்
மீது பொறாமைப் பட்டிருக்கிறேன்
நொந்திருக்கிறேன்...!!!
உன் கால்களில்
தழுவும் கொலுசுகளின்
மீது பொறாமைப் பட்டிருக்கிறேன்
அதன் ஓசையிலும் நான்
ஒழிந்திருக்க கூடாதா என்று எனை நானே
வருந்தியிருக்கிறேன்...!!!
உன் விரல் தீண்டிய
கைகுட்டையாய் நான் நெய்யப்பட்டிருக்க
கூடாதா என்று -நீ கண்ணீரில் விழும்போது
ஏங்கியிருக்கிறேன்..!!!
ஒவ்வொரு
அசைவிலும் உன் இடை நடுவில்
தொலைந்து போய்விட கூடாதா
என்று- இன்று நான்
காத்திருக்கிறேன்..!!!
-பிசாசு-
அழகாக நெய்யப்பட்ட கவிவரிகள்
ReplyDeleteSuperaaa machan
ReplyDelete