Thursday, October 20, 2016

காதல்..!!!

காதல் ஒரு
கைக்குழந்தை
வா என்று கை நீட்ட
ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும்..! 

நினைக்கும் போது வலியாகவும்
மறக்கும் போது நினைவை கூட்டும்
வழியாகவும் தொடர்கின்ற பயணம்..!!!

இளமையின் உயிர்பின்
இதயத்தின் தீண்டல்
உயிரின் வார்ப்பில்
ஜென்மத்தின் தேடல்..!!!

கனவுகளின் பிரசவம்
கவிதைகளின் வசம் காதல்...!!!

கண்கள் வளர்க்கும்
அருசுவை அமிர்தம்
இதழ்கள் சுவைக்கும்
கசப்பு தீணி..!!!

அவள் எழுதும் எழுத்து
இவன் வாசிக்கும் வரிகள்..!!!

ஊசி முனையின் அழுத்தம்
வெண்பஞ்சின் வருடல்..!!!

காதல்..!!!
ஓற்றை  இருளுக்குள்
பொருள் தேடுவதல்ல
வாழும் உயிருக்குள்
உயிர் தேடுவது..!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...