Saturday, October 8, 2016

காதலின் இறுதிவரை..!!!

உன்னாலே உயிர் பெற்று
உணர்வுகளை சுவாசிக்கின்றேன்

உன் பிரிவுகளிலும் 
நான் பிரியப்படுவது -என்
உயிர் எனைவிட்டு
பிரிவதையே சகியே..!!!

அடைக்கலம் கேட்கின்றேன்
நான் உனக்குள் மட்டும்
ஆயுள் தண்டனையில்
சிறைகைதியாய்..!!!


என் ஒவ்வொரு நாளும்
உனக்காய் உன்  மடியினில்
மட்டுமே விடிய
ஆசைப்படுகின்றேன்
எனக்குள் நீ விடியலாய்
வாழ்வதால்..!!!


உனை சிந்திக்க மறந்தால்
என் இதயம் 
சின்னாபின்னமாகின்றது
சந்திக்க வேண்டுமென்று 
கதறி அழுகின்றது
அது உயிர்ப்பதாயினும் 
துடிப்பதாயினும் உனக்காகவே 
வேண்டுமென்கின்றதடி சகியே..!!!

வாழும் நாட்கள் உனக்காகவே
நகரும் போது உயிர்விட்டு போவதாயினும்
உனக்காய் உயிர்விட்டு போகவே
ஆசைப்படுகின்றேன்..!!!


என்னவளே எனக்குள்
உயிராய் கலந்தவளே..!!!
உன்னதமானவளே 
உணர்ச்சிகளையும்
உடைத்தெறிந்து
உயிராய் காதலை  
சுமந்தவளே..!!


எனக்குள்ளேயே 
தொலைந்துவிடு நீ
உனக்குள்ளே -என்னை 
நான் தேடி
நாம் வாழ்ந்துவிடுவோம்
காதலின் இறுதிவரை..!!!
-பிசாசு-


No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...