Wednesday, October 19, 2016

என் தேவதைக்கு

நான் கண்ட சோகங்களை
எல்லாம் நீ கொண்ட காதலில்
சுமந்தவளே என்னவளே..!!!

எத்தனை ரணங்கள் 
எத்தனை ஏமாற்றங்கள் 
அத்தனையும்  மறந்து நான் 
புன்னகைத்திருப்பது
உன்னாலே..!!!

பாரமாய் நான் இருக்க 
உன் விழியோரமாய் எனை சுமந்து
கண்ணீரை துடைத்தவளே..!!!

சிலையான என்னை 
சிரிக்க வைத்தவளே
என் உத்தமியே..!!!

உடல் கொண்ட காதல் எல்லாம்
மண்ணாகி போயிருக்க
மனம் தந்த உன் காதல் மணக்குதடி
என் வாழ்வில்..!!!

சின்ன சின்ன சண்டைகள்
சிங்கார சில்மிசங்கள்
மிச்சமே வைக்க முடியாத 
உன்  அழகை பருகி 
அன்பில் உருகி எழுதி திளைக்கின்றேன் 
இங்கு ஒரு கிறுக்கள்..!!!


காதலியாய் வந்து 
என் ஓர்  அன்னையாகி 
மரணத்தை  கொன்று  நீ
ஜனனத்தை கொடுத்த
என் தாயுமானவளே..!!

மறு பிறப்பிலும்  நான்
வேதனையில் பிறந்திட
நீயே  வந்துவிடு காதலாய்
காயங்கள் ஆற்றி ஆறுதலாய்..!!!
-பிசாசு-
 

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...