இடைவிடாது துடிப்பது உனக்காகவே..!!
முடமாகி கிடந்த கால்கள் கூட
துள்ளி எழுந்து ஒடுவதும் உனக்காகவே…!!!
சுவாசிக்க மறந்த என் ஜீவன்
யாசித்து யோசித்துக்கிடப்பதும் உனக்காக..!!!
கண்களிலும் மஞ்சம் அமைத்து
நீ கொஞ்சிவிளையாட பார்வைகள்
பார்த்திருப்பதும்
உனக்காக..!!!
நெஞ்சத்தில் வஞ்சமில்லா
காதலொன்றை
பொத்தி பொத்தி வளர்ப்பதும்
உனக்காக..!!!
இரவுகளை தொலைத்து
கனவுகளை கடன் வாங்கி
கவிதைகளில் வட்டி கொடுப்பதும்
உனக்காக..!!!!
காலை நேர நிலவாய்
மாலை நேர வெயிலாய்
கண் சிமிட்டி காத்திருக்கின்றேன்
உனக்காக..!!!
பாலுக்காய் அழும் குழந்தையாய்
உன் காதலை வேண்டி அழுதுபுறண்டு
கிடப்பதும் உனக்காகவே..!!!
என் கக்கத்தில் ஓர் அனைப்பும்
உனக்காகத்தான்
நெற்றிபொட்டில் பதித்திடும் முத்தமும்
உனக்காகத்தான்..!!!
உள்ளங்கை இணைப்பில் உஷ்ணமும்
உனக்காகத்தான்
காதோர தென்றலின் ஈரமும்
உனக்காகத்தான்..!!!
என் இளமையின்
இன்பங்கள் உனக்காக..!!!
முதுமையின் பாசங்கள் உனக்காக
தாயன்பின் நகழ்கள் உனக்காக
மழலைகளின் சத்தங்கள் கூட
உனக்காக மட்டுமே…!!!
சகியே..!!!
ஓர் ஜென்மம் நான் வாங்கி
வந்ததென்னவோ எனக்காகத்தான்
என் ஜென்மத்தின்
மோட்சம் என்றுமே நீயாகத்தான்..!!!
என் எதிர்காலம்
எல்லையில்லா கிரகமாய்
உனக்காகத்தான்..!!!
-பிசாசு-
No comments:
Post a Comment