Wednesday, October 26, 2016

காதலா காயமா..!!!

என் இதயத்தின் நரம்புகளை அறுத்து -உன்
காதலிசைக்கு வீணை அமைத்தவள் நீ
மௌனங்களின் விதைகளை தூவி 

என் மொழிகளை காயப்படுத்தியவளும் நீ.!!!


உலகையும் மறந்து 
உணர்வுகளையும் துறந்து
உயிரற்றுகிடந்த என்னில் காதலுயிர்
தந்தவளும் நீ மட்டும்தான்..!!!


இதுதான் காதலா..????


நான்தான் தனியாகி கிடந்தேன் நீயேதான் 
துணையாகி வந்தாய்- காய்ந்த நிலமதில்
காதல் துளி சிந்தினாய்..!!!


வசந்தமில்லை வாழ்ககையில் 
வண்ணம் தந்தாய்
சொந்தமில்ல உறவுகளில் நீ 
புது பந்தம் தந்தாய்
சொர்கத்தின் சாயலை காதல் 
சொற்களில் தந்தாய்
நரகத்தின் வேதனைகளையும் 
மறக்க வைத்தாய்
நீ தந்ததுதான் உலகின் காதலா..???


இன்று நீ
மொளனம் கரைந்து
வார்த்தை திரவங்களில்
என் நெஞ்சமதில் தீட்டியதான் காயமா..???
காதல் தந்த நீயே காயமும் தருவதா..???

சகியே..!!!
பூக்களும் முற்களாகுமா.???
மேகமும் தீயை பொழியும்..???
காற்றும் காயம் கூட்டுமா..???
தேவதைகளும் பொய்யாய் போகுமா…???
உண்மை காதலும்
காயமாகுமா..?????

--பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...