மலர்கள் மலர்ந்து வாசம் வீசும்
இயற்கை தேசம்..!!
இன்றே நட்டால் நாளை பயன்தரும்
மரங்கள் வளர்ந்திடும்
வியக்கும் தேசம்..!!
பட்டாடை உடுத்தி நிலவும்
ஊர்வலம் போகும்
அழகிய தேசம்..!!
அழகிய தேசம்..!!
கால்கள் முளைத்து
நட்சத்திரங்கள் நடந்திடும்
வெளிச்ச தேசம்..!!
பனியாய் உறையும் சூரியன்
உதிக்கும்
அக்கினி தேசம்..!!
எரிமலை குழம்பும்
அடுப்புக்கரியாய் பயன்படும்
உக்கர தேசம்..!!
கற்சிலைகளும் உயிர்க்கொண்டு
உறவாடும்
அதிசய தேசம்..!!
அதிசய தேசம்..!!
வெயில் காலங்களிலும் வானவில்
தோன்றிடும்
நிறங்களின் தேசம்..!!
நிறங்களின் தேசம்..!!
மலைகளிலும் சிறு கடல்கள்
அலைமோதும்
அற்புத தேசம்..!!
அற்புத தேசம்..!!
உப்பு நீர் கலக்காத கடல்
இருக்கும்
தண்ணீர் தேசம்..!!
தண்ணீர் தேசம்..!!
நீரின்றி சுவாசித்து
பறந்து திரியும் மீன்கள்
நீந்தும்
வளி தேசம்..!!
பேசும் புறாக்களும்
தூதுபோகாத
தூரதேசம்..!!!
தூரதேசம்..!!!
பாடும் கழுதைகள் ராகம்
இசைக்கும்
சங்கீத தேசம்..!!
சங்கீத தேசம்..!!
குயில்களும் பஞ்சவர்ணத்தில்
பறந்து திரியும்
இனிமை தேசம்...!!
நல்ல சகுணங்களை சொல்லித்தரும்
பூனைகள் வழிபோகும்
நட்பு தேசம்..!!
பெண்களும் விந்துகொண்டு
உயிர்கள் படைத்திடும்
பண்பு தேசம்..!!
பண்பு தேசம்..!!
ஆண்களும் கருவுற்று பிள்ளை
பிரசவிக்கும்
கற்பு தேசம்..!!
கற்பு தேசம்..!!
நல்ல மனிதம் போற்றி
உதவிகரம் நீட்டும் மனிதன் வாழும்
நேய தேசம்..!!
எல்லை கோடிட்டு தொல்லையில்லா
மனிதன் வாழும்
பரந்த தேசம்..!!
அனாதை இல்லங்கள்
முதியோர் இல்லங்கள்
அன்பு பெருகும் இல்லம்
இந்த தேசம்..!!
இது சிவப்பு தேசம்
நான் கண் மூடி
நான் கண் மூடி
கனவில் கண்ட தேசம்..!!
என் தமிழ்தாயின் மடியில்
அவளின் தாலாட்டில்
எழுதும்
கவிதை தேசம்..!!
ஒரு வேளை இது உருவாகினாலும்
இல்லை கலைந்துப்போனாலும்
என்றும் இது
புதிய தேசம்..!!!
-பிசாசு-
No comments:
Post a Comment