கணங்களைக்கொண்டு
உறைய வைக்கின்றாய்
என் இதயத்தை..!!!
மறுநொடியே
வெள்ளிப்புன்னகை வீசி
நிறைய வைக்கின்றாய்
அதே இதயத்தை..!!!
அடிக்கடி கோபங்களின்
கீற்றுக்களை வழியனுப்பி
உரசிப் புண்ணாக்குகின்றாய்
என்னுயிரை..!!!
சிறு இடைவெளியில்
ஓடி வந்து அரவனைத்து
உயிரையும் கூட
கரைய வைக்கின்றாய்..!!!
சிறு நாடகம்
அரங்கேற்றி வெறுமேடையாக்கினாய்
புது காதல் கதையெழுதி
பைத்தியமாக்கினாய்..!!
சகியே..!!!
பேச்சில்லை நீ
மெளனமாய் நின்ற போது
மூச்சில்லை நீ
பிரிந்து போகும் போது
இன்று
நானேயில்லை நீ
எனக்காய் இல்லாத போது..!!!
-பிசாசு-
No comments:
Post a Comment