Sunday, September 25, 2016

ஒரு நாள்..!!!

என் அன்பே உன்னருகிள் நான் 
வாழ்ந்திட வேண்டுமடி

உன் விரல் நடுவில்
சிக்கிக்கொண்டு ஒரு நாள்..!!!
உன் விழி பார்வையில்
இமைக்கொண்டு ஒரு நாள்..!!!

உன் இதழ்களின்
முத்தத்தில் ஒரு நாள்..!!
உன் புன்னகையின்
சத்தத்தில் ஒரு நாள்..!!!

உன் காற்றின்
சுவாசத்தில் ஒரு நாள்..!!!
உன் மூச்சின்
வேகத்தில் ஒரு நாள்.!!!


உன் இதயத்தின்
துடிப்பினில் ஒரு நாள்..!!!
உன் வெட்கத்தின்
நடிப்பில் ஒரு நாள்..!!!


உயிரான உன்
காதலில் ஒரு நாள்
ஆறுதலான மடியில் 
ஒரு நாள்..!!!
அன்பான அனைப்பில் 
மற்றொரு நாள்..!!!


ஒவ்வொரு நாளாய் ஒரு நூரண்டு
உன்னோடு நான் வாழ
என்னோடு நீ சேர
நம் காதலோடு வாழ்ந்து
கல்லரையிலும் உன்னோடு
வாழ வேண்டும் ஒரு நாள்..!!!
-பிசாசு-




No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...