Wednesday, September 7, 2016

நீ தான்...!!!

என் இரவோடு நான் காணும்
கனவுகளும்
நீ தான்...!!!
என் இரு கண்ணில் தோன்றும்
ஒரு காட்சி நீ தான்..!!!

என் வார்த்தைகளில் பிறக்கின்ற 
வலிமையும் நீ தான்..!!!
என் மௌனத்தில் உருவான 
அமைதியும் நீ தான்..!!!
என் மொழிகளில் வாழ்கின்ற 
தொன்மையும் நீதான்..!!!

என் வழியில் பூக்கின்ற 
பூக்களும் நீ தான்..!!!
என் வாழ்வில் வந்த 
வசந்தமும் நீ தான்..!!!

விரல் பிடித்து நடந்த 
குழந்தையும் நீ தான்..!!!
அடம்பிடித்து இதயத்தில் 
இடம்பிடித்த 
இம்சையும் நீ தான்..!!
என் நெஞ்சில் ஒரு கணம் 
அக்கினியாய்
சுட்டவளும்
நீ தான்..!!!
மறுகணமே பக்கதில் வந்து 
முத்தமிட்டவளும் நீ தான்…!!!

காதல் காட்டியவளும் நீ தான்
என்னில் காயங்கள் கூட்டியவளும் நீ தான்..!!!

உன்னோடு வாழும் என்
உடலும் நீதான்..!!!
மண்ணோடு மண்ணாகிப்போனாலும்
 என்னோடு வாழும்
உயிரும் நீதான்..!!!

நான் என்றும்
நீ தான் 
நீயென்றும் நான்தான்
இறுதிவரை என்றும் நாம் தான்..!!!
-பிசாசு-



No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...