Wednesday, June 20, 2018

காதலித்தால் கவிதை வரும்மென்பது
பொய்யாகி போனதோ தெரியவில்லை
நான் காதலிக்க ஆடையுடுத்திய
கவிதையாய் நீ..!!!

எனக்கு உன்னை அதிகமாய் பிடிக்குமடி 
அழகே- என்னை உனக்கும் 
பிடிக்குமென்பதால் அளவில்லாது 
என்னையும் பிடித்துபபபோகின்றதடி உயிரே..!!!

பிரம்மனின் அற்புதபடைப்பு நீ
தமிழ்தாயின் ஓர் 
குறுந்தொகையும் நீ..!!!
கவிதைகளின் மொத்த தொகுப்பும் நீ
நான் கொண்ட காதலின் 
வகுப்பும் நீயே தான்..!!!

நீ பேசியதெல்லாம் எழுதி தீர்க்க 
ஏடுகள் போதவில்லை-உன் 
இடைமொழியில் 
என் கற்பனைக்கு அங்கு பஞ்மில்லை..!!!

எங்கெல்லாம் உனை தேடினேன் என்று
நான் சொல்ல -உன்னுள்ளே தானே 
இருக்கின்றேன் என்பாய்..!!

நீயின்றி நானில்லை என்று கவிதை மொழிந்தால்
நீயேதான் நான் என்று நீ காதல் மொழிவாய்..!!!

“எதை கண்டு நீ எனை காதலித்தாய்”
என்ற உன் கேள்விக்கு- ஆயிரம் கவிதையில் 
நான் சொல்லிட முடியாதடி
ஒற்றை வரிகொண்டு சொல்வதென்றால்
“உன்னைக் கண்டால் காதலுக்கே காதல் வரும்”
துளிர்விடும் கவிஞன் எனக்கு வராதா..????

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...