சொல்ல மறுக்கும்
உன்சின்ன மெளனத்திற்கு நடுவில்
என் மொத்த மொழிகளையும்
வாரிக்கொண்டாய்..!!!
ஊடல் நீ கொண்டாய் என்று
ஒதுக்கிடவும் முடியவில்லை
கோபம்தான் கொண்டாய் எப்படியென்று
கோபிக்கவும் இயலவில்லை
இரண்டுக்கும் நடுவில் எனை
இம்சை செய்கிறாய்
பிடிவாதக்காரியாய்….!!!
உன்னுள்ளே இருக்கும் ஓரனப்பில்
நீ பார்க்கும் பார்வையில்தான்
என்னிதயம் லேசாகுமென்றால்
உன் மௌனத்தை இப்படியே
வைத்துக்கொள்- நான் தினம் தினம்
வார்த்தைகளை தேடியே திறிகின்றேன்..!!!
மெளனம் கலைத்து பேச நீ விரும்பினால்
இறுதியாய் ஓர் வழி செய்
அஞ்சலில்
“காதல் அஞ்சலியாய்”
இல்லையேல்
கண்ணீர் அஞ்சலியாய்..!!!
-பிசாசு-
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
Wednesday, June 20, 2018
Subscribe to:
Post Comments (Atom)
நீ
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...

-
எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய் எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது எவை மறக்கப்படுகிறதோ அவைள் அணைத்...
-
மூச்சுக்கு முன்னூறுதடவை என் பெயர் உச்சரித்தவள் இன்று ஒரு பேச்சுக்கு கூட என் பெயர்க்கொண்டு அழைக்க மறுக்கின்றாள் என்னை மறந்துபோன என் காதலை ம...
-
நீ இல்லாத நாட்கள் வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!! வெளிச்சமற்ற விண்மீன்களின் ஊர்வலமாய் எந்தன் வானம்..!!! நீ இல்லாத நாட்கள் உறங்காத கண்...
No comments:
Post a Comment