Wednesday, June 20, 2018


கவிதை எழுதத் துடிக்கிறேன்
காதலை பற்றி…!!!
கதைச்சொல்ல விரும்புகின்றேன் 
நான் காணும் சமூகத்தை பற்றி..!!!

முட்டிமோதி முன்னேறுகிறேன்
முயற்சியை விட்டுவிடாது..!!!
கட்டிப்போட்டாலும் 
களைத்துபோகவில்லை
கவிதைகளை காதலிப்பதைவிட்டு..!!!

கண்ணில் பட்டதை நெஞ்சை சுட்டதை
இதயம் கொண்டதை எழுதிட விளைகின்றேன்..!!!
உயிரில் விழுந்ததை மட்டும் உள்ளே வைத்து
வளர்க்கின்றேன்…!!!

எனக்காய் நான் வாழ்கின்றேன்
என் எழுத்துக்களில் 
ஒழிந்துக்கிடக்கின்றேன்..!!!

கம்பீரமாய் ஒன்று சொல்கின்றேன்
காலத்தைப் போல் ஒரு
கவிஞன் இல்லையென்று

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...