உறவுகளுக்குள்
விரிசல் பெற செய்கிறது..!!
செத்துமடிந்த
உணர்வுகளுக்கு புதுபெயர்
கொடுத்து கெடுத்துவிடுகிறது...!!
அதிக அன்பின்
மறுவடிவம் என பிதற்றிக்கொண்டு
உறவுகளை உருகுலைத்து விடுகிறது..!!
உன்னையும் என்னையும்
மட்டுமல்ல
அவளையும் அவனையும்
சேர்த்து
ஓரடி தூரம் தூக்கி வீசி
எறிந்துவிடுகிறது..!!
படுக்கையை தள்ளி வைக்கிறது..!!
பாசத்தை கொள்ளி வைக்கிறது..!!
உணர்வுகளை கிள்ளி வைக்கிறது.!!
பிரிவுகளை தாராளமாய் அள்ளி வைக்கிறது..!!
கொட்டி கொட்டி
பேசிய வார்த்தைகள் எல்லாம்
தேளாய் மாறி கொட்டிட செய்கிறது..!!
இது
ஆண்மையின் வீரத்தின் ஆணவமா..??
இல்லை
பெண்மையின் மென்மையின் தாண்டவமா..??
ஆதரவாய்
கட்டியணைத்த கரங்கள்
ஆவேசமாய் வேடம் கொண்டு
அடித்திட ஓங்கிட செய்கிறது..!!!
நம்பிக்கையை உடைத்து
அன்பை புதைத்து
சந்தோஷத்தை கெடுத்து
எண்ணங்களை அசிங்கப்படுத்தி
பரண்மேல் பத்திரபடுத்திய கட்டைபோல்
பக்குவமாய் அமர்ந்துக்கொண்டு
உறவுகளின் உயிர்களை
அடுப்பில் எறியும் விறகுபோல்
எறித்து சாம்பலாக்கிவிடுகிறது...!!
எது இது..???
No comments:
Post a Comment