Tuesday, August 2, 2016

காத்திருக்கின்றேன்..!!!

அவளுடன் வாழ நினைத்தேன்
அவளுக்காகவே வாழ நினைத்தேன்

எனக்கென அவள் கிடைப்பாளோ..???
என்னுடன் வாழ அவளும்
துடிப்பாளோ??

அவளுடன் கைபிடித்து
கடற்கரையில் பாதச்சுவடு கொண்டு
ஓவியம் தீட்டிட ஆசை..!!!

காட்டினுளே புகும் 
ஒற்றை பாதையில் நடந்திட ஏக்கம்..!!!

அவளுடன் படகில் தனியே செல்ல
ஆனந்தமாய் வாழ்வை கடந்து செல்ல
கிடைப்பாளா எனக்கானவளாய் அவள்..!!

பனித்துளி விழுந்த புல் நுனியில்
அவள் மடியில் என் தலைவைத்து 
அவள் தலை கோதி கதைகள் பேச..!!

நான் அவள் மழலையாய்
மனம்மாறி அடம் பண்ண
வேண்டும்..!!!

அவளுக்குள் நானும் எனக்குள் அவளுமாய்
தடம்மாறி இடம்மாறி போகவேண்டும்..!!

அன்புடன் ஒருவாய் உணவூட்ட
சின்ன சின்னதாய்
சண்டையிட்டு அவள் அன்பிற்காக 
மண்டியிட்டு
முத்தத்தின் முடிவில் 
புது யுத்தமே தொடங்க வேண்டும்..!!

இப்படியெல்லாம் 
அழகாய்- என் நாட்களை 
கடந்திடவே என்னை தேடி வருவாளா..???

அழகான எண்ணங்கள் 
நெஞ்சினில் அலைமோத
கவிதையோடு அவளை காதலித்து
அவளுக்காக காத்திருக்கிறேன்
ஆவலுடன் பார்த்திருக்கிறேன்
வருவாளா அவள்???
-பிசாசு-
பாலகிருஷ்ணன் சந்ரு's photo.


No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...