Friday, July 29, 2016

ஏனடி வந்தாய்


பாலகிருஷ்ணன் சந்ரு's photo.

ஏனடி வந்தாய் 
சருகாகிக் கிடந்த என் இதயத்தில்
காதலை பூக்கச்செய்து
உயிர் நோக பறித்துச் செல்லத்தான்
வந்தாயா..???


வெறுமையாய்
கிடந்த என் வாழ்க்கை தாளில்
கவிதைகள் ஆயிரம் எழுதி
படித்திடும் முன்பே கிழித்தெறிந்திட
வந்தாயா..???

குருடென கிடந்த என் கண்களுக்கு
பார்வை கொடுத்து வழிக்காட்டி
பயணங்கள் தொடங்கும் முன்
விழிகளை பிடுங்கிட
வந்தாயா.???

கல்லென கிடந்த -என்
கனவுகளை எடுத்து சிலையென
செதுக்கி உருகொடுத்து உருவாக்கிவிட்டு
உயிர் கொடுக்கும் நேரம் பார்த்து
உடைத்திட வந்தாயா..???

உறைந்து கிடந்த
உதிரத்தை கரைய வைத்து
உணர்வூட்டி - அது உடலோடு
உறவாடும் முன்பே
பொசுக்கிட வந்தாயா..????

முடமென கிடந்த எனக்கு
உயிரூட்டி நடைபயிலும் முன்பே
மண்ணுக்குள் புதைத்திட வந்தாயா..???

ஏனடி வந்தாய் நீ
எதற்காக என்னை விட்டுச் சென்றாய்???

என் சிந்தனைகளை சிறையெடுக்கவா..??
உறவாடி உயிர் பறிக்கவா..???
ஏனடி வந்தாய் நீ..???

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...