Saturday, July 30, 2016

நினைவுகள்


நொடிக்கொரு முறை
உன் மடிதேடி என் காதல் 
ஓடி வந்த நினைவுகள் 
மறந்துவிட்டதா..???

சகியே..
இன்று 
தினமொரு முறையேனும்
கண்ணீரிலே கரைத்து
துடைத்துவிடுகின்றேன் 
நீ பிரிந்து சென்ற அந்த நாளின்
நினைவுகளை...!!!

அன்று ஆசைகளே
இல்லா ஆடவனாய் நான் வாழ்ந்த 
அந்த நாட்களில்
எனக்கு மீசை முளைக்கும் முன்பே
காதல் ஆசை காட்டியவளே
இன்றும் 
பசுமையாகவே 
படந்து கொண்டிருக்கின்றது
அந்த நினைவுகள்..!!!

காத்திருக்கின்றேன்
கண்மணியே என்றோ ஓர் நாள்
நீ என் கரம்பற்றுவாயென்று
ஆனால் இன்றுவரை 
கைரேகைகளே மீதமாய்
காட்சி தருகின்றது..!!!

உன் கொழுசொலியில்
அன்று பிறந்த என் கவிதைகள் கூட
எங்கே உன் மெட்டி ஒளியில்
மரணித்துவிடுமோ என்று
அதன் பார்வைகளை கூட
மறைத்தே வைத்து வளர்க்கின்றேன்
பாவம் அவையாவது
உயிருடன் திரியட்டுமடி
உன் நினைவுகளை சுமந்தபடி
என் நாட்குறிப்பேடுகளில்...!!!
                                                              -பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...