Thursday, July 28, 2016

தஞ்சமடைந்தேன்..!!




உண்மையான காதலென ஒன்றை
எனக்கு காட்டினாய் -என் இதயம்
நொறுங்கிய போது
உன் நினைவுகளை கொண்டு
எனக்கு தாலாட்டு பாடினாய்..!!!

மௌனமான உன் 
தாலாட்டில் என்
குமுறல்களை ரசித்தாய்
அமைதியாய் கேட்டு..!!!

இன்னும் அந்த அதிஷ்டமற்ற இரவில்
உன் நினைவில் என் மூச்சு
நின்று போது -உனக்கும்
ஒரு அங்குலம்கூட
நகர முடியவில்லை..!!!

என் இதயம் துடிப்பது நின்றது..!!!


நான் மீண்டும் உன்னை
பார்க்க மாட்டேன் என் நினைத்தேன்.!!!.
நீ அந்த இரவை வென்றாய்
மறுபடியும் என்னிடம்
வந்தாய்..!!!

என்னை தினமும் வீட்டுக்கு
அழைத்து சென்றாய்..!!!
கனவில் கைகோர்த்து நடந்தாய்
காதலாய் பேசி - ஆசை கூட்டிஇன்று என்னை தனியே
விட்டு சென்றாய்..!!!

சந்தனமாய் இருந்த
நீ
இன்று
சாம்பலாய்
போனாய்..!!!
நான் சமாதியில்
தஞ்சமடைந்தேன்..!!!

என்றென்றும் உன்  நினைவில் "பிசாசு"

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...