Thursday, July 28, 2016

என் விதி..!

அன்னையவள் தந்த உயிரில் 
அங்கங்கே கொஞ்சம் செல்லரிப்பு..
அனுதினம் ஏதோ ஒரு தேடலில் 
கண்கள் தினம் கண்ணீரில் உப்புகரிப்பு..!!!
வீட்டுக்குள் இருப்பது 
வீட்டுக்காவலானது- பாதங்கள் 
வெளியில் தடம் பதித்தால் 
ஊர் கடத்தல் ஆகின்றது..!!!
உடலுக்கு சுமை இன்று 
உயிரானது -அந்த 
உயிருக்கும் கூட சுமை உன் 
பிரிவானது..!!!
ஓரிரு மாதங்கள் நாம் ஒன்றாய் 
உறவாடினோம்..!!!! 
ஓராயிரம் ஜென்மங்கள் வாழ்ந்ததாய் நாம் 
உறவாகினோம்..!!!
நிலவொளியாய் நித்தம் 
நாம் பூமிக்குள் காதலை இதமாக்கினோம்..!!
இதயத்தில் ஈரமாக்கினோம்..!!!
உணர்சிகளை 
உடைத்தெறிந்து 
உணர்வுக்குள் 
காதல் உணர்வுக்குள் 
உயிராகினோம்..!!!
உணர்சிகளை 
உடைத்துவிட்டு 
உண்மையாய் 
உள்ளத்தில் காதலை நாம்
வளர்த்ததாலோ எல்லாமே 
இன்று இல்லாமல் போனது..?????
மாறாது என்று எண்ணியதொல்லாம் 
என் போதாத காலமோ தெரியவில்லை மாறிப்போனது..???
நம் காதலை நமக்குள் தொலைத்து 
நம்மை மண்ணுக்குள் மண்ணாக்கிப் புதைத்து
நாமாக இருந்த நம்மை
உன்னை நீயாகவும் 
என்னை நானாகவும் 
பிரித்து எடுத்துச்சென்னறுது..??
சொல்லடி சகி... !! 
அழுகுதே என் விழி..???

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...