Friday, July 29, 2016

தரிசனம் தருவாயா..??

பல நாள் மௌனம்
உன்னை பார்க்காமல்
சில நாள் துன்பம்
உன் அருகில் இல்லாமல்..!!

ஒவ்வொரு நொடியும்
சிரித்து சிரித்து பேசி
சின்ன சின்னதாய்
குறும்புகள் பல செய்து
சிந்தை முழுவதும் -உன் 
நினைவுகளை சுமந்து
சுற்றிதிரிந்த என் நிமிடங்கள்
சிறைவைக்கப்பட்டுவிட்டது
நகரமுடியாமல்- கடவுள் தரிசனம்
காணாத பக்தனாய்..!!

உன் மௌனங்களின் 
கனங்களைக்கொண்ட
மறு பரிசீலனை செய்ய சொல்கிறது
என் விழிகள்

பாவம் அவை
எவ்வளவு நாட்கள்தான்
பார்வையிழந்து கிடக்கும்- உன்
தரிசனத்துக்காய்..!!!

                             -பிசாசு


No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...