பூக்களின் தேவதை நீயானால்
வாழ்க்கைக்கு
வாசம் கூட்டிட..!!!
இரவாய் உன்னை நாடி வருவேன்
நிலவாய் நீ அழகானால்
நிலாச்சோறு ஊற்றிட..!!

குழந்தையாய் கைவீசி ஓடி வருவேன்
தாயாக நீயானால்
மடிசாய்ந்து
உறங்கிட..!!!
கார்மேகமாய் தவழ்ந்து வருவேன்
செம்மண்ணாய் நீயானால்
மழைத்துளியால்
ஈரமாக்கிட...!!!
கடல் அலையாய் புறண்டு வருவேன்
கரையாய் நீ ஒதுங்கினால்
கிழிஞ்சல்களை
சேர்த்திட.!!!
இவையாவும் தீர்ந்துபோக
கவிதையோடு வருவேன்
உயிரே நீயானால்
காதலாய் கலந்து - உன்னோடு
வாழ்ந்திட..!!!!
பிசாசு
No comments:
Post a Comment