நிலை பெற- நமக்கு
உடல் தந்து
உயிர் தந்து- வாழ்க்கை தந்து
அந்த வாழ்க்கைகாய்
தினம் தன்னுயிர்
சிந்தும் அன்பின்
அடையாளம் "தாய்"
அப்படி பட்டவளுக்காய்
வாழ்வதும்
பிறார்த்திப்பதும் ஏன்
உயிர் விடுவதும் சுகமே..!!!
அழுக்காய் இருந்த என்னை
அழகாய் வளர்த்தவள்...!!
பல நேரம் தான் பசித்திருந்து
என்னை புஷிக்க வைத்தவள்..!!
தன் முதுகில் கூடை சுமந்து
என்னை புத்தகம் சுமக்க வைத்தவள்
அந்த பாரத்தை கூட அவள் சுமக்க..!!
தான் கந்தை துணியுடுத்தியபோதும்
என்னை காற்சட்டை உடுத்தி
அழகு பார்த்தவள்..!!!
நானின்று வாழ தன் வாழ்வை கொடுத்தவள்
அவளுக்காய் வாழ்வதும்
அவளோடு வாழ்வதும்
நான் செய்யும் சிறு கைமாறுதானே..!!!
No comments:
Post a Comment