Saturday, July 30, 2016

தலையனை காதல்...!!

கனவுகளை திண்று உறங்காது
தாகத்தில் விழித்திருக்கின்றது
என் கட்டிலில் தலையணை..!!!

உன் நினைவுகளில் உறங்கும் போதெல்லாம்
அது விழித்துக்கொண்டு
காதல் ஆசை பேசுவது -என் காதுகளில்
மெதுவாக கேட்கின்றது...!!!

அதனால் தனியாகத்தானே இருக்கின்றாய் என்று
துணைக்கொன்று வாங்கி வைத்தேன்- அந்நொடி முதல்
நான் உறக்கம் கெட்டுபோனேன்..!!!

என் தலையணைப்பதற்கு பதிலாக
அவையிரண்டும் கட்டியணைத்துக் கொள்கின்றன..!!!

கவிதை புத்தகத்தை அவன் மீது வைத்து
நான் வைத்து எழுதும்போதெல்லாம்- என்
பின்னால் இருக்குமவள்
எட்டிப் பார்த்து ஓரக்கண்ணால் - கவி வரிகளை
திருடிக்கொள்கின்றாள்
திருடப்படுகின்ற கவிதைகள் அணைத்தும்
அவர்களின் காதல் பாஷையாக இரவில்
என் காதுகளில் கேட்கின்றன..!!!

ஒன்றன் மீதொன்றடுக்கி
நான் தலை சாயும் போதெல்லாம்
அப்பப்பா முத்த சத்தங்கள் விடாது கேட்கின்றன
முடியவில்லை என்னால்...
அவர்களுக்கு பதிலாய் 
நான் வெட்கி புன்னகைகின்றேன்...!!!

இது போக...
சில நேரங்களில் 
அவனை மட்டும் வைத்துக்கொண்டு
உறங்கும் போதெல்லாம் -என்னுறக்கம் கெடுத்து
என் கழுத்தை அழுத்தி வலி கொடுத்து
எப்படியோ அவளையும் -தன் அருகில் 
கொண்டுவந்து வைத்துவிட செய்கின்றான் 
சிறந்த காதலன்..!!!

நான் வடிக்கும் கண்ணீர் கொண்டு 
கவிதைகளை கிறுக்கிட கற்றுக்கொண்டான் 
கள்ளன்...!!!

பகல் முழுவதும் பிரித்து வைத்துவிடுகின்றேன்
என்று புலம்பி தவிக்கிறார்கள்
அதனால் எனக்கேன் இந்த பாவம் என்று 
இப்பொழுதெல்லாம் -என் போர்வைகளினால்
மூடிவிட்டே எழுகின்றேன்..!!!

நான்தான் தனியாகி போனாலும் காதலில்
இவர்கள் காதலிக்க கட்டியணைக்க நான்
சீக்கரமே உறங்கி போகின்றேன்...!!!

அவர்களாவது காதலித்து கொண்டே
வாழ்ந்துவிட்டு போகட்டும்..!!!

                                                 -பிசாசு-
நன்றி தமிழ் FM "உயிரின் ஓசை"

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...