Friday, July 29, 2016

என்னவள் அழகு..!!!

நீ ஆற்றில் குளிக்கும் அழகை கண்டு
மீனை கவ்வும் நாரையும் தனை மறந்து
பாறைபோல் நிற்குதோ..!!!
நீ பூசும் மஞ்சளோடு சேரத்தான் 
அதிகாலை கதிரவனும்
மஞ்சள் நிறத்தில் உதிகிறானோ..!!!
உன் மேனி பட்டுபோகாமல் காக்க...
நீ சூடும் பட்டாக மாற...
பட்டு பூச்சிகள் தன் கூட்டுக்கள்
தவம் கிடக்குதோ..!!!
நீ கண்ணோரம் இடும் கண்மைக்கு
கருமை சேர்கத்தான்
கார்மேகம் வானில் கூடுதோ..!!!
உன்னை சேரும் வரம் வேண்டி
உன் பின்னலில் ஓர் இடம் தேடி
மின்னலும் உன் ஜன்னல் வழி
எட்டி பார்குதோ..!!!
நீ அணியும் வளையலில்
ஓர் வண்ணமாய் சேரத்தான்
வானவில்லும்
வளைந்து பூமிக்கு வர
துடிக்குதோ..!!!
தமிழ் மரபில் வளர்ந்த பெண்ணே....
தான் படைத்த இயற்கை அனைத்தும்
மயங்கி நிற்பதை கண்டு
இறைவனும் பூமிக்கு வந்தானோ????
உன் அழகை கண்டு அவனும் பேச்சற்று
சிலையாய் கோயிலில் நின்றானோ..!!!!

-பிசாசு-


No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...